இதுவரை, தாகம் மிக அதிகமானதால் களைத்துப்போய் நடக்க முடியாத நிலைக்கு ஆளான ராஜாவும், மந்திரியும் அருகே இருந்த ஒரு பாறையின் மேல் அமர்ந்தனர். அப்போது மலையின் உச்சியில் இருந்து பாறையின் வழியே மஞ்சள் கலந்த நீர் வருவதைக் கண்டு இந்த மலைக்காட்டின் நடுவே யாரு இருப்பது என குழப்பத்துடன் தண்ணீர் வந்த வழியே நடக்கத்தொடங்கினர்.
தண்ணீர் வந்த வழியே பின்தொடர்ந்து சென்ற ராஜாவும் மந்திரியும் மலையின் உச்சிக்கு சென்றபின் அங்கு ஒரே ஒரு வீடு மட்டும் இருப்பதை பார்த்து அதிசயித்து நின்றனர்.
மன்னர் : மந்திரியாரே! இந்த நடுகாட்டில் யார் இங்கு வசித்து வருகின்றனர் என தெரியவில்லையே? எதற்கும் ஒருமுறை கதவை தட்டி யார் என கேட்டுவிடலாமா?
மந்திரி : ஆம்! மன்னா, மக்கள் நடமாட்டமே இல்லாத இந்த இடத்தில் யார் வசித்து வருகிறார்கள் என தெரியவில்லையே? ஒருவேளை யாராவது காட்டுவாசி மனிதர்களின் வீடாக இருக்குமோ என பயம் கலந்த சந்தேகத்துடன் கேள்வி கேட்க,
வாருங்கள் மந்திரியாரே யார் என்றுதான் பார்த்துவிடுவோம் என கதவை தட்ட ஆரம்பித்தார் மன்னர்.
மன்னர் : வீட்டின் உள்ளே இருப்பது யார் என தெரிந்து கொள்ளலாமா? என சத்தத்துடன் கதவைதட்ட உள்ளே குளித்துக் கொண்டிருந்தவர்களின் தண்ணீர் சத்தம் நின்றதுடன் யார்? என ஒரு அச்சம் கலந்த கேள்வியும் கேட்டது.
மன்னர்: நான் தான் இந்த நாட்டின் மன்னர், வேட்டைக்கு வந்து மிகவும் களைத்துப்போய் உள்ளது தாகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா?
அக்கா : தங்கையே! அம்மா இல்லாத சமயத்தில் யாரோ நமது வீட்டிற்கு வந்துள்ளனர். இப்போது நாம் வெளியில் சென்று பார்ப்பது நமக்கு நல்லதா?
தங்கை: அக்கா! பலவருடங்களாகவே நாம் எந்த ஒரு வெளிமனிதரின் தொடர்பும் இல்லாமல் இருந்து வருகிறோம். வந்திருப்பவர்கள் வேறு மன்னர் என்று கூறுகின்றனர். எனவே நாம் வெளியில் சென்று அவர்களை சந்திக்கலாம்.
அக்கா: சரி! நீ வெளியே வரவேண்டாம், நாம் ஜன்னல் வழியே அவர்களுக்கு தண்ணீரை கொடுத்து அனுப்பி விடுவோம் எனகூறியவாறு ஜன்னல் வழியே தண்ணீர் செம்பினை நீட்டினாள்
அதேசமயம், அவளது அழகாக கையினை கண்ட மன்னர் எப்படியாவது அவளது முகத்தினை காணவேண்டும் என்னும் நோக்கில் செம்பினை தவறவிடுவது போல கீழே கொட்டினார்.
பிறகு செம்பினை எடுக்க அக்கா வெளியே வர, அவளது அழகில் மயங்கிய மன்னர் தம்மை மணமுடித்துக் கொள்ள வற்புறுத்தியதோடு தங்கை நரி மந்திரியையும் மணமுடித்துக் கொள்ள வற்புறுத்தினர்.
அப்போது, அக்கா நரி அம்மா இல்லாத சமயம் நாமாக எந்த முடிவும் எடுக்க கூடாது, எதற்கும் நாம் அம்மா வரும் வரை காத்திருப்போம் எனக்கூற, அம்மா வந்தால் கண்டிப்பாக நமது திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டாள் எனவே நான் இப்போதே இவர்களுடன் செல்ல போகிறேன் என தங்கை செல்ல அவளது பிடிவாதத்திற்கு முன் தோற்றுபோன அக்காவும் அவர்களுடன் செல்ல தொடங்கியது.
ஆனாலும், அம்மா நம்மை தேடுவார்களே என கவலையடைந்த அக்கா நரி செல்லும் வழியில் தமது ரிப்பனை சிறு சிறு துண்டுகளாக வழியெங்கும் போட்டுக் கொண்டே நகரம் வரை சென்றது.
அதேசமயம், நீண்ட நேரமானதால் குழந்தைகள் பசியில் வாடுவார்களே என பயத்தில் வேகவேகமாக வந்த தாய் நரி வீட்டின் கதவு திறந்துகிடந்ததுடன் பிள்ளைகளையும் காணவில்லையே என கதறி அழதொடங்கியது. அப்போது...
(தொடரும்)
0 Response to "தாய் நரியும் அதன் நன்றி கெட்ட குட்டியும்!! பாட்டி கதை - பகுதி 2"
Post a Comment