சின்னவனே! பெரியவனே! பாட்டி சொன்ன பேய் கதை!😱

சின்னவனே! பெரியவனே! பாட்டி சொன்ன பேய் கதை!😱

சின்னவனே! பெரியவனே! பாட்டி சொன்ன பேய் கதை!😱

புளியங்குளம் என்னும் ஒரு அழகான கிராமத்தில் அண்ணன் தம்பி இருவர் வாழ்ந்து வந்தனர். பொதுவாகவே கிராமங்களில் அண்ணன் தம்பிகளை சின்னவன் , பெரியவன் என அழைப்பது வழக்கமான ஒன்றாகும். மேலும் அவர்களது ஊர் ஒரு சிறிய கிராமம் என்பதாலும் அங்கு பெரிய அளவில் மக்கள் தொகை இல்லாததாலும் அவர்களையும் அங்கு சின்னவனே பெரியவனே எனவே அவ்வூர் மக்கள் அழைத்து வந்தனர்.




அவர்களில் பெரியவன் மிக சுறுசுறுப்பானவனாகவும் சின்னவன் சற்று சோம்பேறியாகவும் இருந்ததனர். இருவருடைய தாய் தந்தையினரின் மறைவுக்கு பின்னர் பெரியவன் அவர்களது தோட்டத்தில் வேலை செய்து வந்து கொண்டும் சின்னவன் வீட்டில் அண்ணியாகிய கோதைக்கு துணையாக வீட்டில் ஒத்தாசையாகவும் இருந்து வந்தான்.



அன்று வயலில் நிறைய வேலைகள் பாக்கியிருந்ததால் பெரியவன் காலையில் நேரமே வேலைக்கு சென்றுவிட்டான். இதனால், கணவன் மிகுந்த பசியில் இருப்பான் என அவனுக்கு பிடித்தமான உணவினை சமைக்கலாம் என மார்க்கெட்டில் இருந்து மீன் வாங்கி கொண்டு வந்து பார்த்து பார்து சுவையாக சமைத்து வைத்திருந்தாள். 


தினமும் அண்ணனுக்கு மதிய வேளையில் உணவு கொண்டு செல்வது சின்னவனின் வழக்கமான வேலைகளில் ஒன்றாகும். எனவே அன்றும் அண்ணனுக்கு உணவு எடுத்து செல்ல சொல்லி உணவுகளை கூடையில் கட்டி வைத்துக் கொண்டு கோதை வீட்டு வேலைகளை பார்க்க சென்று விட்டாள். 

மதிய வேளை நெருங்கி விட்டதால் தனக்கும் சாப்பாட்டினைக் கட்டிக் கொண்ட சின்னவன் அண்ணனுக்கு சாப்பாட்டினை எடுத்துக் கொண்டு செல்ல தயாரானான். அண்ணன் வேலை செய்யும் வயலுக்கு செல்ல வேண்டுமானால் ஒரு அனாதைக் காட்டினை கடந்து செல்ல வேண்டும். அந்த காட்டின் நடுவே ஒரு பெரிய புளியமரம் இருக்கும். அந்த மரத்தில் பேய் உள்ளது என அந்தப் பக்கம் யாருமே செல்லமாட்டார்கள். 


ஆனால் அந்த வழியை விட்டால் மாற்றுவழி ரொம்பதூரம் என்பதால் சின்னவன் அந்தக் காட்டின் வழியே சென்று விடலாம் என நடக்கலானான். மதிய வேளையில் பசிக் களைப்புடன் நடந்த சின்னவன், சரி நமக்கு கொண்டுவந்த சாப்பாட்டினை சாப்பிட்டு சிறிதுநேரம் புளியமரத்துகடியில் ஓய்வெடுத்துவிட்டு செல்லலாம் என நினைத்து மரத்தின் அடியில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.

"அவன் சாப்பாட்டு தட்டினை திறந்ததுமே மீன்குழம்பின் வாசனையில் மரத்தின் மேல் இருந்த பேய் சின்னவனை நோட்டமிட தொடங்கியது". 

சிறிது நேரத்தில் சாப்பிட்டு முடித்த சின்னவன் மரத்தில் அடியிலேயே தூங்க ஆரம்பித்தான். இதுதான் சமயம் என நினைத்த பேய் மரத்துக்கடியில் இருந்த குழம்பு வாளியை எடுத்து உள்ளிருந்த மீன் மற்றும் சாப்பாடு அனைத்தையும் உண்டுவிட்டு முள்ளினை மட்டும் வாளிக்குள்ளேயே போட்டுவிட்டு மரத்தின் மீது ஏறிக்கொண்டது. 

இது ஏதும் அறியாத சின்னவன், தூங்கி எழுந்தவுடன் நேரமாகிவிட்டது என வேகமாக நடக்க ஆரம்பித்தான். அதேசமயம், கொள்ளைப்பசியுடன் காத்திருந்த பெரியவன், சின்னவனின் வருகையைக் கண்டதும் கைகளை கழுவிவிட்டு, டேய்! சின்னவனே சீக்கிரம் வாடா என கத்தியபடியே சாப்பிட அமரலானான். 

சின்னவன், அண்ணனுக்கு சப்பாட்டினை எடுத்து வைக்க மீன் குழம்பின் வாசனையை உணர்ந்த பெரியவன் இன்று ஒருபுடி புடிக்க வேண்டும் என ஆவலுடன் குழம்பு வாளியை திறந்தவனுக்கு ஒரே அதிர்ச்சி😲!!!

வாளியில் ஒரு சிறு மீன்துண்டு கூட இல்லாத நிலையில் சின்னவனிடம் விசாரிக்க தமக்கு ஏதும் தெரியாது, அண்ணி கொண்டு வந்த சாப்பாட்டினை அப்படியே கொடுத்துவிட்டேன் என கூற மாலை வீட்டுக்கு வந்ததும் கோதையிடம் சண்டையிட ஆரம்பித்தான். 

தாம் மீன் துண்டுகளுடன் நிறைய சாப்பாட்டினைதான் கொடுத்து அனுப்பினேன் என கோதை எவ்வளவோ மன்றாடியும், கோபம் குறையாத பெரியவன் சீக்கிரமே தூங்க சென்றதுடன் காலை மீண்டும் நேரமாகவே வயலுக்கு சென்றுவிட்டான். 

இதனால் மிகுந்த கவலையடைந்த கோதை, அடுத்த நாள் மீண்டும் மீன் வாங்கி சமைத்து நிறைய உணவினை சின்னவனிடம் கொடுத்து அனுப்பினாள். ஆனால், முந்தைய நாளினைப் போலவே மீண்டும் புளியமரத்தின் அடியில் சின்னவன் தூங்க மரத்தின் மேல் இருந்த பேய் மீண்டும் உணவினை எடுத்து உண்டதுடன் மீண்டும் முள்ளினை வாளிக்குள்ளே போட்டுவிட்டு மரத்தின் மீது ஏறி விட்டது. 

இதனையறியாத சின்னவன், மீண்டும் பெரியவனிடம் அந்த காலி வாளியைக் கொடுக்க பயங்கர கோபம் கொண்ட பெரியவன் வீட்டு வந்து கோதையிடம் பயங்கரமாக சண்டையிட்டதுடன் சின்னவனிடமும் சண்டையிட்டு சென்றுவிட்டான். 


ஒன்றுமறியாத கோதை, சின்னவனிடம் விசாரிக்க அவன் நடந்த அனைத்தையும் கூறலானான். ஆனாலும், சந்தேகம் அடைந்த கோதை சரி என்னதான் நடக்கிறது ? ஒருவேளை இவன் சாப்பாட்டினை சாப்பிட்டுவிட்டு வெறும் வாளியினை கொடுக்கின்றானோ என சந்தேகித்தாள். 

அதனால், மீண்டும் அடுத்த நாள் மீன் குழம்பினை சமைத்த கோதை சின்னவனிடம் உணவினை கொடுத்து அனுப்பியதுடன் அவனுக்கு தெரியாமலே பின்னால் சென்று நோட்டமிட ஆரம்பித்தாள். 

இதனையறியாத சின்னவன், வழக்கம்போலவே புளியமரத்தின் அடியில் சாப்பிட்டுவிட்டு தூங்க ஆரம்பிக்க அந்த பேய் வாளியில் இருந்த உணவினை உண்ண ஆரம்பித்தது. அட இதுதானா விஷயம் என உணர்ந்த கோதை வீட்டுக்கு சென்று மீண்டும் உணவினை வேறு வாளியின் எடுத்து பெரியவனிடம் கொடுத்ததுடன் நடந்ததையும் எடுத்துரைத்தாள். 


உண்மையறிந்த பெரியவன் அந்த பேயை சும்மா விடக்கூடாது என கோதையுடன் ஆலோசித்து, அடுத்த நாள் மீண்டும் மீன் குழம்பினை வைத்ததுடன் கண்ணாடி பொருட்களை நன்றாக அரைத்து குழம்பிற்குள் கலந்து வைத்து சின்னவனிடம் கொடுத்துவிட்டனர். 

இந்த விவரம் ஏதுமறியாத அந்த பேயும் சின்னவனின் வருகையைக் கண்டு ஆவலுடன் எதிர்நோக்க, சின்னவன் வழக்கம்போல தமக்காக எடுத்து வந்த உணவினை உண்டுவிட்டு தூங்குவதுபோல் நடிக்க ஆரம்பித்தான். 


இதுதான் சமயம் என மரத்தினை விட்டு இறங்கிய பேய் சாப்பிட்டினை எடுத்து உண்ண ஆரம்பிக்க அந்த கண்ணாடி துண்டுகள் நாக்கு மற்றும் வயிற்றுக்குள் இறங்கி உடலை கிழிக்க, பேய்! அய்யோ! அம்மா என அலற ஆரம்பித்தது. 

இதற்கிடையில், ஊர்மக்களுடன் கையில் செருப்பு மற்றும் விளக்குமாறுடன் வந்த கோதை மற்றும் பெரியவன் அனைவரும் அந்த பேயை அடித்து துரத்த, அந்த பேயோ விட்டால் போதும்டா சாமி! என்றவாறு ஊரை விட்டே ஓட ஆரம்பித்தது.

இதன்பின்னர் பேய் பயமில்லாத புளியங்குளம் மக்கள் சந்தோசமாக தங்களது வாழ்க்கையினைவாழ தொடங்கினர். 


0 Response to "சின்னவனே! பெரியவனே! பாட்டி சொன்ன பேய் கதை!😱"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel

email-signup-form-Image

Subscribe us👇

Get the latest updates via Email