கிராமங்களுக்கேயான பச்சைப் பசேலென வயல் வெளிகளும், தண்ணீர் பற்றாக்குறை என்றால் என்னவெனவே அறியாத அளவிற்கு நீர்வளம் மிகுந்த கிணறு, ஏரிஎன எழில்மிகுந்து காணப்பட்ட கிராமம் தான் வில்லியனூர் அருகே உள்ள ஒரு அழகான கிராமம் சுத்துக்கேணி.
என்னதான் அழகு மிகுந்து காணப்பட்டாலும், நகரத்தை விட்டு வெகுதொலைவில் இருந்ததால் அங்கு போக்குவரத்து என்பது மிக குறைவாகவே இருந்து வந்தது. அவசரத்திற்கு ஒரு மருத்துவமனை செல்ல வேண்டுமேயானால்கூட ஊரில் இருந்து 18 மைல்கள் சுற்றி அருகேயுள்ள ரோட்டுபகுதிக்கு சென்றால்தான் பேருந்து கிடைக்கும்.
அதிக மக்கள்தொகை இல்லாத கிராமம் என்பதால் இவர்களின் ஆதரவில் தாங்கள் இல்லையென நினைத்தார்களோ என்னவோ, ஓட்டுபோடும் நாட்களை தவிர எந்த ஒரு அரசியல் தலைவர்களில் நிகழ்ச்சிக்கு கூட அரசியல் தலைவர்கள் அந்தப்பகுதிகளுக்கு வருவதில்லை.
இருந்தும்கூட, அங்கிருந்த மக்களுக்கிடையே எந்தவித குறைகளும் இல்லாமல் வாழ்ந்து வந்தனர். ஆனாலும், பெண்களின் பிரசவம் என்பது மட்டும் அவர்களுக்கு பெரிய தலைவலியாக இருந்து வந்தது. ஏனென்றால், பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல நகரத்திற்கு வேண்டும் என்பது அவர்களுக்கு ஒரு பெரும் குடைச்சலாகவே இருந்தது. இதனாலேயே அவ்வூர் மக்களில் யாருக்கேனும் பிரசவ வலி வந்துவிட்டால் போது அவ்வூர் மக்கள் எல்லோருமே ஒன்று கூடிவிடுவர். இதனால் கடந்த 5 வருடங்களில் ஒருமுறைகூட மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் அவ்வூர் மக்களுக்கு ஏற்படவில்லை.
ஆனாலும், என்னவோ தெரியவில்லை? பூங்குழலிக்கு மட்டும் இந்த விஷயம் மனதில் கணத்துக் கொண்டே இருந்தது. 8 மாத கர்ப்பிணியான பூங்குழலிக்கு இந்த பயம் இருப்பது என்னவோ தவறில்லை போலும் எனினும் இரண்டாவது பிரசவத்துக்கு ஏன் இவ்வளவு கவலை என யோசிக்கும் கார்த்திகேயனின் கூற்றிலும் தவறில்லைதான்.
பூங்குழலியும் கார்த்திகேயனும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இருவருமே பெரிய குடும்பத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், வெவ்வேறு சாதியை சார்ந்தவர்கள் என்பதால் வீட்டை விட்டு வெளியே வந்துதான் திருமணம் செய்துகொள்ள முடிந்தது.
இருவீட்டார்களின் எவ்வித ஆதரவும் இல்லாமலிருந்தாலும்கூட கடந்த ஆறுவருடங்களில் அவ்வூர் மக்களில் அன்பிலும் ஆதரவிலும் தமக்கு ஒரு குடும்பம் இருந்ததையே மறந்திருந்த அவ்ர்களுக்கு சிவராமன் என்னும் 3 வயது குழந்தையும் இருந்தது.
மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்திருந்த நாளில் இருந்தே இரவு 8 மணிக்கு வேலை முடிந்து வரும் கார்த்திகேயன் 4 மணிக்கே வீட்டிற்கு வந்து மனைவியை கண்ணில்வைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.
இருந்தும்கூட, அன்று அவ்வூரில் பிரசவம் பார்க்கும் ராணி,பூங்குழலியின் வயிறு வழக்கத்தினைவிட மிகப்பெரியதாக உள்ளதால் அவளுக்கு பிரசவம் பார்க்கும்நாளில் பெரிய சவால் இருக்கலாம் என கூற அப்படி சொன்னதிலிருந்தே கார்த்திகேயனுக்கு ஒரு கலக்கம் உண்டாயிற்று.
கதை அடுத்த பகுதியில் தொடரும்...
0 Response to "எண்ணி துணிக கருமம் 😔 😔? - சிறுகதை பகுதி 2"
Post a Comment